இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன்பகுதி மற்றும் பின்பகுதி ஆசனங்களில் அமரும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டிகளை அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பழைய வாகனங்களில் பின் இருக்கை பட்டிகளை அணிவதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 19 ம் திகதிக்குப் பின்னர் விதிகளை மீறும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டாது.
அத்துடன், இச்சட்டத்தை மீறும் வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான பொலிஸ் சோதனைகளும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.








