பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் தொடர்பான திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) சான்றுரை வழங்கினார்.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமூலம்இ தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்தவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
திருத்தத்தின் பிரதான நோக்கம்இ சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளை தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப அதிகரிப்பதாகும்.
இதன்படிஇ 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்ந்தும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன்இ குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.10இ000 இலிருந்து ரூ.100இ000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.








