கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2 வயதும் 6 வயதுமுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் மேல் தளத்தில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ பரவலுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








