Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்து அந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

74 வயதான இம்ரான் கான், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது உடல்நிலை மற்றும் சிறையில் உள்ள தனது மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளுக்கு அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தனது வலது கண்ணின் பார்வை சுமார் 85 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதால் மூளை இரத்தக் கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீண்ட நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தனது உடல் மற்றும் மனநலத்தைப் பாதித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மனைவியின் உடல்நிலை குறித்தும் கவலை!

தனது மனைவி புஷ்ரா பீபியின் கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் நிரந்தரமாகப் பார்வையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு!

தன்னை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்ததாகவும், அந்த உத்தரவு இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகளை உருவாக்கிய தான், இன்று தனக்கும் தனது மனைவிக்கும் மருத்துவ உதவி கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டுமானால் உயிருடன் இருக்க வேண்டும். காலம் கடப்பதற்குள் எனக்கு நீதி வழங்குங்கள்” என நீதிபதிகளிடம் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

அடுத்த செய்தி

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
வங்காள விரிகுடாவில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடாவில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check