பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தம்பதியினர், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கூட்டுப் பயணமாக இந்தியாவின் மும்பை நகரைச் சென்றடைந்துள்ளனர்.
மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் இன்று காலை ஆரம்பமான இந்த விஜயத்தின் போது, அரச கடமைகளுக்கு அப்பால், மக்களுடன் இணைந்து பாரம்பரியமான தெருக் கிரிக்கெட் (Gully Cricket) விளையாட்டிலும் இருவரும் பங்கேற்று மகிழ்ந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்த இளவரசி கேட், அவருடன் கலகலப்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் புகழ்பெற்ற சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கர், தற்போது தனது அறக்கட்டளை ஊடாக வசதி குறைந்த குழந்தைகளின் விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தியாவின் கலாசாரம், ஆடை அலங்காரம், திரைப்படத்துறை மற்றும் இந்தியா – பிரித்தானியா இடையிலான நீண்டகால உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளது.
மேலும், நாளை மாலை நடைபெறவுள்ள பிரம்மாண்டமான ‘Earthshot Prize’ விருது வழங்கும் நிகழ்விலும் வில்லியம் மற்றும் கேட் தம்பதியினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து மேற்கொள்ளும் இந்த உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.









