மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்படாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், எதிர்காலத்தில் விலை திருத்தம் குறித்து அரசாங்கம் முடிவெடுக்குமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் இதற்கு முன்னர் மூன்று முறை மேற்கொள்ளப்பட்டது.
எனவே எதிர்காலத்தில் நாட்டிற்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்களைக் கருத்தில் கொண்டு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.
ஜூன் முதல் வாரம் வரை நாட்டில் 92 மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் போதுமான அளவில் கையிருப்பு இருக்கும் .
இரண்டு கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன.
27ஆம் திகதி 30,000 மெட்ரிக் டொன் 92 பெட்ரோலையும், 5,000 மெட்ரிக் டொன் 95 பெட்ரோலையும் ஏற்றி வரும் ஒரு கப்பல் வரும்.
நாளை 18,000 மெட்ரிக் டொன் டீசலையும், 18,000 மெட்ரிக் டொன் 92 பெட்ரோலையும் ஏற்றி வரும் ஒரு ஐஓசி கப்பல் வரும்.
மேலும் 28 மற்றும் 29ம் திகதிகளில் ஒரு கப்பல் வரவிருந்தது. அது முன்னதாகவே வந்து தற்போது சரக்குகள் இறக்கப்பட்டுள்ளன.
அதில் 37,000 மெட்ரிக் டொன் டீசல் உள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெய் தீர்ந்துவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேலும் டீசலையும் எரிபொருள் எண்ணெயையும் தயாரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.









