சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விசேடமாக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் பிரதான பஸ் நிலையங்களை மையப்படுத்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்விசேட திட்டம் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் பொதுமக்கள் மீண்டும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குத் திரும்பும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் உரிய பிராந்தியங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளின் கீழ் திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









