ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவரிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அதன் பின்னர் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது









