அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சியில் அரிய வகை வெள்ளை நிற பெல்கன் கழுகொன்று 4 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் சிறப்பாக இடம்பெற்று வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியிலேயே இந்நிகழ்வு நடந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட ‘கார்மூஷா பியூர் அல்ட்ரா வயிட்’ ரக வெள்ளை நிற பெல்களே இவ்வாறு அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









