அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போதே குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 194 கிராம் ஐஸ்bபோதைப்பொருள், 217 கிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனபொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அஹு ங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









