அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான 2ம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்கென ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி , பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இம்மாத ஆரம்பத்தில் இருதரப்பினருக்குமிடையில் பாகிஸ்தானில் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.








