இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டை, எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் பாவனையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனூடாக தேசிய டிஜிட்டல்மயப்படுத்தல் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுசெல்லுதல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் சுட்டிக்காட்டத்தக்க அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்துமென அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








