அமைதிக்கான நடைபயணத்தின் 4ம் நாள் இன்றாகும். நேற்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமான நடைபயணம், 25 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நேற்றுமாலை மாவனெல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையை சென்றடைந்தது.
அதற்கமைய இன்று காலை பெலிகம்மன ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகியுள்ள அமைதிக்கான நடைபயணம், தோலங்கமுவ தேசிய பாடசாலை வரை பயணிக்கவுள்ளது.
நாட்டிற்கு வருகைதந்துள்ள வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய பஞ்ஞாகர தேரரின் பங்கேற்புடன், அமைதிக்கான நடைபயணம் கடந்த 22ம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.









