ஐ.பி.எல். தொடரின் நேற்றைய தினம் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி 103 ஓட்டங்களினால் வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் தாம் பந்துவீச்சில் ஈடுபடுவதாகவும் சென்னை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சென்னை அணியின் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்ஷன் 54 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 101 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார்.இந்த பருவத்தில் தனது இரண்டாவது சதத்தை அடித்துள்ள சம்ஷன் மொத்தமாக 5 சதங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் 208 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
மும்பை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் திலக் வர்மா அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
நேற்றைய வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









