நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 3990 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1602 ரூபாவாகும்.
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுஇ அதன் புதிய விலை 750 ரூபாவென லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.









