கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஈராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் சூழல் காரணமாக ஹோமூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளமையினால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் உற்பத்தி குறைப்பு காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
போர் நீடிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடுமென பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.









