நேபாளத்தில் இடம்பெற்ற இளைஞர் போராட்டத்தின்பின்னர் பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறுகிறது.
போராட்டத்தினூடாக அப்போதைய பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட அரசாங்கம் பதவிவிலக வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், இன்றைய தேர்தல் முக்கிய பேசும்பொருளாக காணப்படுகிறது.
275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்திற்கு 165 உறுப்பினர்கள் வாக்கெடுப்பினூடாக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
சுமார் 19 மில்லியன் வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்று வருவதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









