பெரு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதியாக ஜொஸ் மாரியா பல்கசார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நீதிபதியும், இடதுசாரி சட்டவரைஞருமான ஜொஸ் மாரியா பல்கசாரை , இடைக்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்வதற்கு பெரு இராச்சியத்தின் கொங்கிரஸ் சபை வாக்களித்துள்ளது.
வலதுசாரி தலைவரான ஜொஸ் ஜேரியை நீக்கி, ஒருநாளின் பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின்பின்னர் புதிய நிறைவேற்றுசபை பதவியேற்கும் வரை , ஜொஸ் மாரியா இடைக்கால ஜனாதிபதியாக பெரு இராச்சியத்திற்கு தலைமை தாங்கவுள்ளார்.
53 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் மாதம் 12ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.









