க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வழக்கை, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.









