ரஷ்யாவிடமிருந்து இரண்டாயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி வொளோடிமிர் ஷெலன்கி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டின்கீழ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவிக்காத நிலையில், குழந்தைகளை பாதுகாப்பதாகவும், அவர்களின் உறவினர்கள் அடையாளத்தை உறுதிசெய்யும் பட்சத்தில் குழந்தைகளை திருப்பி அனுப்ப தயாராகவுள்ளதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது.
அதற்கமைய இதுவரை இரண்டாயிரம் குழந்தைகள் ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரக்கணக்கானோர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.









