சீனாவில் பட்டாசு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீன மரபின்படி அந்நாட்டில் தற்போது வசந்த விழா புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டு பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் ஹுபேய் மாகாணத்தின் ஜியாங்யாங் நகரிலுள்ள பட்டாசு விற்பனை நிலையத்திலேயே திடீரென வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.









