லங்கா சீனி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் கையளித்துள்ளார். நிறுவனத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை வரம்புகளைத் தெளிவுபடுத்திய போதிலும், அதற்கு முரணாகச் செயல்படுமாறு ஒரு சிலரிடமிருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் காணப்பட்டதாக சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நல்லாட்சி மற்றும் நிறுவனத்தின் நலனைக் கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.









