டித்வா சூறாவளி தாக்கத்தால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனரமைக்கும் ‘கட்டியெழுப்புவோம் உறுதிப்பாட்டின் சின்னங்களை’ தேசிய திட்டத்தின் ஆரம்ப விழா இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
டித்வா சூறாவளியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் மத்திய நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புனித யாத்திரை மற்றும் பிற மத நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஏற்பாட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.









