இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
‘வராஹா’ (ஏயசயாய) மற்றும் ‘அதுல்யா’ (யுவரடலய) ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகைதந்துள்ள நிலையில், இலங்கை கடற்படையினரால் கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்கப்பட்டன.
96.2 மீட்டர் நீளமான கடல்சார் ரோந்துக் கப்பலான ‘வராஹா’ கடற்படை கட்டளை அதிகாரி அஷ்வினி குமாரினால் வழிநடத்தப்படுகிறது.
50 மீட்டர் நீளமான வேக ரோந்துக் கப்பலான ‘அதுல்யா’ கடற்படை கட்டளை அதிகாரி அனித் குமார் மிஸ்ராவினால் வழிநடத்தப்படுகிறது.
இக்கப்பல்கள் இலங்கை கடலோர காவல்படையினருடனான பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை கடலோர காவல்படைகளுக்கு இடையிலான பல்துறைசார் உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.









