தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான அதிகளவான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் குறித்த தாழமுக்கம் கிழக்கு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவிததுள்ளார்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் மத்திய ஆகிய பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









