அவுஸ்திரேலியாவில் நிலவும் வெப்பஅலை தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயை உருவாக்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் லெங்வுட் மற்றும் வோல்வா நகரங்களுக்கிடையே சுமார் மூவாயிரம் ஹெக்டயருக்கும் அதிகமான பரப்பில் இரண்டு இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் வெப்பநிலை 40 பாகை செல்சியசுக்கு அதிகமாக காணப்படுமெனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலைகளின் தாக்கத்தினால் எந்தளவு பாதிப்புக்கள் ஏற்படுமென கணிப்பிடமுடியாதுள்ளது.
எனினும் சுமார் 8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.









