அமெரிக்கா பெரும் எண்ணிக்கையிலான சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ அமைப்புக்களிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதில் காலநிலை ஒப்பந்தம், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவுட்டும் அமைப்புக்கள் முக்கியமானவையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் அமெரிக்க தேசிய நலனுக்கு எதிராக செயற்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 தசாப்தங்களில் முதன்முறையாக அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்துகொள்வதை கடந்த வருடம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









