கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐந்து மாடி வோர்ட் தொகுதி சப்ரகமுவ மாகாண ஆளுநர் ச்சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
308 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வோர்ட் தொகுதி, சுமார் 220 கட்டில்களைக் கொண்டுள்ளது.
உடலியல் நோய் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கான பிரிவு, தாய்ப்பால் முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரசவத்தின் பின்னரான பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல சிகிச்சைப் பிரிவுகள் நிறுவப்படவுள்ளன.
நோயாளர்களும் வைத்தியர்களும் எதிர்நோக்கி வந்த அசௌகரியங்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலே புதிய கட்டிட நிர்மாணிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக அதனை பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில் நீண்டகாலத்தின் பின்னர் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்பட்டு, திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









