தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோக்கங்களுக்காக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) பிரித்தானிய தலைநகர் லண்டனுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தின்போது, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை விஜய் சந்தித்து, தமிழகத்தின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விளக்குவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.









