ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ள நிலையில், மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 96,847 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 1,356 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமை காரணமாக, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டிய மருத்துவ எச்சரிக்கை நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டத்தில் 21.27% நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனிடையே, கொழும்பில் 19,412, கண்டியில் 7,164, களுத்துறையில் 6,212 மற்றும் மாத்தறையில் 6,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், தனிநபர் மட்டுமன்றி சமூக மட்டத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.









