நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் (Heat Index) அவதானம் செலுத்த வேண்டிய (‘Caution’) மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் (25) செம்மஞ்சள் மட்டத்திலான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.









