Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மீலாதுன் நபி புனித தினம். பிரதமரின் வாழ்த்துச்செய்தி..

ஆவணி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மீலாதுன் நபி புனித தினம். பிரதமரின் வாழ்த்துச்செய்தி..

இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் ‘மீலாதுன் நபி’ (ஈத்-ஏ-மீலாத்) புனித தினம் இன்று (26) உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் பக்திச் சிறப்புடன் நினைவுகூரப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி..

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுஇ இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த இறைபக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் ‘மீலாதுன் நபி’ நாளுக்காக வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள கிடைத்தமை நான் பெற்ற பாக்கியமாகும்.

நபிகள் நாயகம் அவர்கள் அகில உலகிற்கும் போதித்தது அமைதி, சமத்துவம், கருணை மற்றும் பரஸ்பர மரியாதையின் உன்னத செய்தியையேயாகும். தற்போதைய உலகளாவிய சமூகம் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் மானுடவியல் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்றது. குறிப்பாகக் கொடூர யுத்த மோதல்கள் காரணமாக நிரபராதிகளான மனித உயிர்கள் பலியாகும் துன்புறுத்தலுக்குள்ளாகும் பின்னணியில்இ நபிகள் நாயகம் அவர்களின் அந்தத் தொலைநோக்குத் தத்துவமானது எக்காலத்தையும் விட இன்று மிகவும் பொருந்துகின்றது என்பதே எனது புரிதலாகும்.

குறிப்பாக,  நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து தற்போதைய சமூகத்திற்கும் நமது நாட்டிற்கும் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த முன்மாதிரிகளாக, நீதி நியாயம், மதச்சகிப்புத்தன்மை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பல்வேறு இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில், நாம் ஒருவரையொருவர் புரிந்து உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து எழுச்சி பெறுவதற்கு நபிகள் நாயகம் அவர்களின் முன்மாதிரிகளை நடைமுறையில் நமது வாழ்க்கைக்குள் உள்வாங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த உலகமானது உலகளாவிய போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு, அமைதியானதொரு உலகமாக மாற்றம் பெற வேண்டுமென மனமாரப் பிரார்த்திக்கின்றேன். அத்தோடு, உலகம் முழுவதிலும் போரின் கொடூரத்தினாலும் துன்புறுத்தல்களினாலும் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து வேதனையடையும் அனைத்து மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் ஒரே பிரார்த்தனையாக இருக்க வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

இம்முறை கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு,நீர்கொழும்பு பெரியமுல்லை அல் ஹிலால் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறும் தேசியக் கொண்டாட்டமானதுஇ நமது நாட்டினுள் பன்முகத்தன்மையின் அழகைப் போற்றிப் பாராட்டி மத நல்லிணக்கம்,ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் பலப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என நான் நம்புகிறேன்.

இந்த தேசிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பாடுபடும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட அமைப்புக் குழுவினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேயமிக்க, இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அமைதியும், சௌபாக்கியமும், சகோதரத்துவமும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகள்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிரதமர்,

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

முந்தைய செய்தி

இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிக வெப்பம்

அடுத்த செய்தி

மீலாதுன் நபி புனித தினம். ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி..

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
மீலாதுன் நபி புனித தினம்.  ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி..

மீலாதுன் நபி புனித தினம். ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check