Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாடநூல்களை பழைய காகிதக் கடைக்கு விற்பனை செய்த இரு சந்தேக நபர்கள் கைது.

ஆவணி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பாடநூல்களை பழைய காகிதக் கடைக்கு விற்பனை செய்த இரு சந்தேக நபர்கள் கைது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கி வைக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி,  அந்தப் புத்தகங்களை பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெளியிடப்பட்ட 19,892 பாடநூல்களை கொண்டு செல்வதற்காக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த பியகம பகுதியிலுள்ள நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த மே மாதம் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியின் சாரதியினால் அப்புத்தகத் தொகுதி பொறுப்பேற்கப்பட்டிருந்தது.
எனினும்,  புத்தகத் தொகுதி சரியாக ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்ததையடுத்து, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளைக் ஆரம்பித்த பொலிஸார், குறித்த லொறியின் சாரதியைக் கைது செய்ததுடன்,  அவர் அப்புத்தகத் தொகுதியை எடைக்கு பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
அதற்கமைய  அப்புத்தகத் தொகுதியைக் கொள்வனவு செய்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,  அந்தப் பழைய காகிதக் கடைக்காரர் அப்புத்தகங்களை பேலியகொடை பகுதியிலுள்ள பழைய பத்திரிகை மற்றும் காகிதங்களை அரைக்கும் நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

அடுத்த செய்தி

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check