Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ரஷ்ய சுகாதார அமைச்சரின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவுக்கு

வைகாசி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ரஷ்ய சுகாதார அமைச்சரின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவுக்கு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ரஷ்ய சுகாதார அமைச்சர் திரு.மிக்கைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு புறப்பட்டனர்.

இலங்கை-ரஷ்ய உறவுகளை வலுப்படுத்திய உத்தியோகபூர்வ விஜயதிற்குப் பிறகு புறப்பட்டுச் செல்லும் குழுவினருக்கு பிரியாவிடை அளிப்பதற்காக, சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர். ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சர்வதேச சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர். அனில் சமரநாயக்க ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சிறப்பு வளாகத்திற்கு வருகை தந்தனர். இலங்கைக்கான ரஷ்ய தூதர் திரு. லெவன் ஜகரேயனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சர் உட்பட குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர். நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு விசேட கலந்துரையாடலில்  ஈடுபட்டனர். நாட்டில்  ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் அபிவிருத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் பயன்படுத்தி நாட்டின் சுகாதாரப் பராமரிப்பை வலுவூட்டுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், நேற்று (04) கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தையும் பார்வையிட்டனர். இந்தப் பயணத்தின் போது, தூதுக்குழுவினர் இலங்கை தேசிய மருத்துவமனையின் புதிய வெளிநோயாளர் பிரிவின் அவசர சிகிச்சை பிரிவு அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை ஆராய்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது

இந்த மூன்று நாள் பயணத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவற்றுள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும், கல்விசார் ஒத்துழைப்பு ஆயுர்வேத மருத்துவத் துறை, கணினி மயமாக்கல் மற்றும் சுற்றுலா மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சம்பந்தமான துறைகளுக்கு இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்தி

நாவலப்பிட்டியவில் பாடசாலை சேவை வேன் விபத்து . 13 பேர் வைத்தியசாலையில்

அடுத்த செய்தி

இலங்கையில் முதலீட்டாளர்களான சாதகமான சூழல்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
புதிய கல்வி மறுசீரமைப்புடன் தொழில்சார் கல்வி நிறுவனங்களை முன்னோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை

இலங்கையில் முதலீட்டாளர்களான சாதகமான சூழல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check