நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்றுகாலை 7.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலபிட்டிய – திஸ்பனே சந்தி பகுதியில் வேன் வீதியை விட்டு விலகிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனில் பயணித்த 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து நாவலபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 முதல் 10 வயதுக்குட்பட்ட 11 மாணவிகளும் , 2 மாணவர்களும் அடங்குவர்.
வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









