எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விசேட விலைக்குறைப்பை நாடுமுழுவதிலுள்ள சதொச விற்பனை நிலையங்களினூடாக பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.









