பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின’ போது ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 45 வயதுடைய பெந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









