டித்வா சூறாவளியின் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீள்வதற்கான ரீபில்டிங் ஸ்ரீலங்கா(Rebuilding Sri Lanka) செயலணி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரனம், புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ரீபில்டிங் ஸ்ரீலங்கா செயலணி செயற்படவுள்ளதாக குறிப்பிட்டு, வர்த்தமானி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிட்டப்பட்டுள்ளது.
குறித்த செயலணியில் , பிரதமர் ஹரிணி அமரசூரிய , அமைச்சர்களான விஜித்த ஹேரத், பிமல் ரத்நாயக்க , நளிந்த ஜயதிஸ்ஸ, உபாலி பன்னிலகே, சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட 25 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 வது சரத்துக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.









