தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கம்போடிய படைவீரர்கள் 18 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் நீடித்த யுத்தத்தின்போது அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, 5 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த 18 பேரையும் தாய்லாந்து விடுதலை செய்துள்ளது.
அவர்கள் கம்போடியாவுக்கு பஸ்வண்டியொன்றில் அழைத்துவரப்பட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் கூடி, மகத்தான வரவேற்பளித்துள்ளனர்.
அவர்கள் கம்போடிய பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக கம்போடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









