முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியொன்றை , திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் ஒருவருக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பஒன்றிணைந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவொன்றின் உறுப்பினரின் கைகளுக்கு கிடைக்கப்பெற்றமை தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.









