நாட்டில் மீண்டும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி முதல் செயல்பாட்டிலுள்ள கிழக்கு திசை காற்றழுத்த அலை (Active Easterly Wave) ஒன்று நாட்டை கடந்து செல்லவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனால் 29ம் திகதி முதல் அடுத்த சில தினங்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் சீரற்ற வானிலை தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென முன்கூட்டிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.










