பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மீரிகம முதல் பல்லேகல பகுதிக்கிடையிலான ரயில் மார்க்கத்தில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.
மீரிகமயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் , மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டரை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டரை மேலும் தெரிவித்துள்ளது.









