ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
🔹 இலங்கை விமானப்படையின் L-70 துப்பாக்கி கட்டமைப்புகளை நவீனமயப்படுத்துதல்
🔹 இரு நாடுகளின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பு
🔹 இலங்கை மற்றும் இந்திய தேசிய மாணவர் படையணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு
மேலும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது மற்றும் மீன்பிடிப் பிரச்சினைக்கு இரு நாடுகளும் இணைந்து தீர்வு காண்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.








