பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்! இந்த கட்டம் டிசம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பாடசாலை வளாகங்களில் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றி, நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளில் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாணவர்களின் போக்குவரத்து வசதியை கருத்திற்கொண்டு, தேவைக்கேற்ப ‘சிசு செரிய’ உள்ளிட்ட மேலதிக பேருந்துகள் நாளை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ‘








