புத்தளம், நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கான நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்குத் தேவையான நிலக்கரிவழங்கல் திட்டத்தின் கீழ், நிலக்கரியை ஏற்றிவந்த ‘IVS Trader’ கப்பல் புத்தளத்தை வந்தடைந்தது
அதற்கமைய அதிகாரிகள் தரம் மற்றும் ஏனைய பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கப்பலிலுள்ள நிலக்கரியை இறக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.
இதனிடையே நிலக்கரி கையிருப்பு மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக, எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க இன்று காலை நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்திற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









