இந்தியாவில் நடுபழனி’ என அழைக்கப்படும், பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில் இருந்து,பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.5 அடி உயரமுள்ள மரகத முருகர் சிலை திருடப்பட்டுள்ளது.
இனந்தெரியாத குழுவினர் சிலையை திருடிச்சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அக்குழுவினரை கைதுசெய்ய அக்கும்பலை பிடிக்க, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.









