இலங்கையின் இளநீர் செய்கையை புதிய திசைக்கு இட்டுச் சென்று, உற்பத்தியையும் உற்பத்திறனையும் அதிகரிப்பதையும், இளநீர் மற்றும் அது தொடர்பான தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு நடைமுறைப்படுத்தும் ‘Ceylon King Coconut Village’ தேசிய வேலைத்திட்டம் குருநாகல் மாவட்டத்தில் தெங்கு பயிர்செய்கை சபையின் மகாயாய தோட்ட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இளநீர் செய்கை மாத்திரமன்றிஇ இளநீர் சேகரித்தல்இ போக்குவரத்துஇ பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளுடன் தொடர்புடைய புதிய வருமானம் மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தை வலுப்படுத்துவதும் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக கிராமப்புற மக்களை தேசிய பொருளாதார வளர்ச்சியின் நேரடி பங்காளிகளாக மாற்றுவது எதிர்பார்க்கப்படுகிறது.









