2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகள் பதிவாகியுள்ளது.
குருநாகல் மாவட்டத்திலேயே அதிகூடிய புள்ளிகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்மூல அதிகூடிய புள்ளி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வெளியாகியுள்ள பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.









