வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் துறையில் நீடித்து வந்த நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ராமலிங்கம் சந்’திரசேகர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
வட மாகாணத்திலுள்ள பகுதி வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களின் நிர்வாக செயற்பாடுகளில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்களை அமைச்சர் கேட்டறிந்தார்.
பொதுமக்களின் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே அனைவரதும் முதன்மையான பொறுப்பு.
எனவேஇ பிரச்சினைகளை மேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாகத் தீர்வை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வட மாகாண ஆளுநருடன் நேரடியாகத் தொடர்புகொண்டு சுகாதாரத் துறையினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, நிர்வாக ரீதியாக ஏற்பட்டிருந்த சிக்கல்களுக்கு சுமூகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது.
மக்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய சுகாதார சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
மக்களை மையப்படுத்திய நிர்வாகம் என்பது பிரச்சினைகளை கேட்பது மட்டுமல்லஇ அவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதாகும்.
இந்த அணுகுமுறையுடன் வட மாகாண சுகாதாரத் துறையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவோம் என அமைசச்ர் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.









