இவ்வாண்டுக்கான 2ம் மற்றும் 3ம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
வீட்டுப் பிரிவில் 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு எந்தவிதக் கட்டண அதிகரிப்பும் கிடையாது.
ஆனால், 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன:
210 அலகுகள்: இதுவரை இருந்த ரூ. 9, 570 கட்டணம் ரூ. 1,760 ஆல் அதிகரிக்கப்பட்டு ரூ. 11,330 ஆக மாறும்.
240 அலகுகள்: இதுவரை இருந்த ரூ. 12,120 கட்டணம் ரூ. 2,210 ஆல் அதிகரிக்கப்பட்டு ரூ. 14,330 ஆக மாறும்.
270 அலகுகள்: இவர்களுக்கான கட்டணம் ரூ. 2,660 ஆல் அதிகரிக்கும்.
300 அலகுகள்: இவர்களுக்கான மாதாந்தக் கட்டணம் ரூ. 3,110 ஆல் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









